( SPOKEN LESSONS)
📑 CONVERSATION PRACTICE 📑
Conversation between two friends about opening a bank account !!
வங்கி கணக்கைத் திறப்பது பற்றி இரு நண்பர்கள் பேசிக் கொள்வது !!
Raju : Hi Andrew. I need to open a bank account. Can you give me some advice please?
ராஜு : வணக்கம் ஆண்ட்ரூ. நான் ஒரு வங்கிக் கணக்கை திறக்க வேண்டும். தயவுசெய்து எனக்கு ஏதாவது ஆலோசனை கொடுக்க முடியுமா?
Andrew : Sure, Just visit the near by bank and speak to the bank manager.
ஆண்ட்ரூ : நிச்சயமாக, அருகில் உள்ள வங்கிக்குச் சென்று வங்கி மேலாளரிடம் பேசுங்கள்.
Raju : Can you tell me a better one?
ராஜு : சிறந்த ஒன்றை எனக்கு சொல்ல முடியுமா?
Andrew : I think the best bank for you would be the XXXX Bank.
ஆண்ட்ரூ : நான் உங்களுக்கு XXXX வங்கி சிறந்த வங்கியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
Raju : Ok, Thank you.
ராஜு : சரி, மிகவும் நன்றி.
Bank employee : Good morning, Can I help you?
வங்கி ஊழியர் : காலை வணக்கம், நான் உங்களுக்கு உதவலாமா?
Raju : Good morning. I'd like to open a bank account in your bank.
ராஜு : காலை வணக்கம், நான் உங்கள் வங்கியில் வங்கிக் கணக்கை திறக்க விரும்புகிறேன்.
Bank employee : Certainly. Please follow me and I'll take you to the bank manager.
வங்கி ஊழியர் : நிச்சயமாக. தயவு செய்து என்னைப் பின்தொடருங்கள், நான் உங்களை வங்கி மேலாளரிடம் அழைத்துச் செல்கிறேன்.
Bank manager : Good morning.
வங்கி மேலாளர் : காலை வணக்கம்.
Raju : Good morning sir. I'd like to open a bank account in your bank.
ராஜு : காலை வணக்கம் ஐயா. நான் உங்கள் வங்கியில் வங்கி கணக்கை திறக்க விரும்புகிறேன்.
Bank manager : Of course. Please fill these forms and show me some proof.
வங்கி மேலாளர் : நிச்சயமாக. தயவு செய்து இந்த படிவங்களை பூர்த்தி செய்து எனக்கு சில ஆதாரங்களை காட்டுங்கள்.
Raju : Here's my passport. Can I pay some money into my new account today?
ராஜு : இதோ என்னுடைய கடவுச் சீட்டு. இன்று நான் என்னுடைய புதிய வங்கிக் கணக்கில் பணம் செலுத்த முடியுமா?
Bank manager : Yes, after the account is opened, you can pay directly.
வங்கி மேலாளர் : ஆம், கணக்கு திறக்கப்பட்ட பின், நீங்கள் நேரடியாக பணத்தை செலுத்தலாம்.
Raju: Ok, Thanks.
ராஜு : சரி, நன்றி.
Join our whatsapp Group - Click here or Scan me to Contact
0 Comments